தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - இன்றும், நாளையும் மிக கனமழை எச்சரிக்கை!!

 
heavy rain

தமிழகத்தில் இன்றும், நாளையும் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடியில் அதி கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதி கனமழை பெய்யும் என்பதால் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்வதற்காக ரெட்அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  7 மாவட்டங்களில் கனமழையும்,   8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

rain

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ,தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி ,திருநெல்வேலி ,தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ,தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு நாமக்கல் கரூர் அரியலூர் பெரம்பலூர் திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

rain

நாளை மறுநாள் புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர் ,சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 4ஆம் தேதி தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 5ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் உட்பட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

heavy rain

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.இன்று முதல் வருகின்ற 3ஆம் தேதி வரை மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடாப் பகுதி, தமிழக கடலோரப் பகுதிகள் குமரிக்கடல் ஆகிய  பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.