#BREAKING இன்று 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

 
rain rain

டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

rain

கடந்த 24 மணிநேரத்தில் காரைக்காலில் 19 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மயிலாடுதுறை செம்பனார் கோயில் பகுதியில் 17 செ.மீ கனமழை பெய்தது. நாகையில் 15 செ.மீட்டரும், திருவாரூரில் 14 செ.மீட்டரும், ராமநாதபுரத்தில் 13 செ.மீட்டரும் மழை பதிவானது. சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 5.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மாதவரத்தில் 4.9 செ.மீ, திருவொற்றியூரில் 4.0 செ.மீ, பெரம்பூர், சோழிங்கநல்லூரில் 3.7 செ.மீ, சைதாப்பேட்டை, மீனம்பாக்கம், விம்கோ நகரில் 3.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தது சென்னை வானிலை ஆய்வு மையம். திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரிக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தரைக்காற்று வீசக்கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிட்வா புயலால் அதிகபட்சமாக 80கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.