தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்..!!

 
Q Q

வங்கக்கடலில் நிலவும் தித்வா புயல் நாளை மறுதினம் சென்னையை நெருங்கி வர வாய்ப்புள்ளது. 

இதனால், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (நவ.,28) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

எச்சரிக்கை கூண்டு : 

காரைக்கால் துறைமுகத்தில் 4ம் எண் எச்சரிக்கை கூண்டும், புதுச்சேரி மற்றும் கடலுார் துறைமுகங்களில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.