கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்..!

 
1

கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு அன்னபூர்ணா உணவகம் செயல்பட்டு வருகிறது. சுமார் 50 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த உணவகம் கோவையில் மிகவும் பிரபலமானது. 

இந்நிலையில் அன்னபூர்ணா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் புவிசார் அரசியல் நெருக்கடி காரணமாக எல்பிஜி எரிவாயு விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் எல்பிஜி சமையல் எரிபொருள் கிடைப்பதில் தினசரி குறைபாடுகளை எதிர்கொண்டு வருகின்றோம்.

இது எங்கள் சேவையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் சேவையை முழுமையாக நிறுத்தாமல் தற்காலிக மாற்று நடவடிக்கைகளை அமல்படுத்தப்படுகிறோம். அதன்படி அத்தியாவசிய உணவுப் பொருட்களை மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்து. அதற்கேற்ப ஹோட்டலின் உணவு மெனு பட்டியல் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு பொருட்கள் கிடைக்கும் நேரங்களிலும் மாற்றம் இருக்கலாம்.

இந்த நடைமுறை இன்று (10.3.26) முதல் அமல்படுத்தப்படுகிறது. சமையல் எரிவாயு முழுமையான விநியோகத்தை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசு மற்றும் விநியோகத்தர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றோம். சூழ்நிலையை புரிந்து எப்போதும் போல ஆதரவு வழங்க வேண்டுகிறோம். இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்கு மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறோம்" என கூறியுள்ளனர். இந்த அறிவிப்பு கோவை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.