சினிமா டிக்கெட் விலையில் வரி விகிதம் குறைப்பு! ஆனாலும் திரையரங்கு உரிமையாளர்கள் சோகம்
திரையரங்குகளில் 100 ரூபாய்க்கு கீழ் விற்கப்படும் டிக்கெட்டுகளுக்கு ஐந்து சதவீத ஜிஎஸ்டி என்பது எந்தவிதத்திலும் பிரயோஜனமும் இல்லாத அறிவிப்பு என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம் பேட்டியளித்துள்ளார்.

இந்தியாவில் 100 ரூபாய்க்கு குறைவாக டிக்கெட் விற்பனை செய்யும் திரையரங்குகள் மிகக் குறைவாகவே உள்ளது. சிறிய கிராமங்களில் மட்டுமே அதுபோன்ற திரையரங்குகள் உள்ளது. ஏனென்றால் 100 ரூபாய்க்கு டிக்கெட் விநியோகித்தால் திரையரங்க உரிமையாளர்களுக்கு கட்டுபடியாகாது. குறிப்பாக வட மாநிலங்களில் 700 முதல் 800 ரூபாய் வரை திரையரங்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு இருக்கும் சமயத்தில் நூறு ரூபாய்க்கு கீழ் இருக்கும் டிக்கெட்டுகளுக்கு ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரி என்பது எந்த பிரயோஜனமும் இல்லாதது. ஆனால் நூறு ரூபாய்க்கு மேலே இருக்கும் டிக்கெட்டுகள் அனைத்திற்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
இதனால் திரையரங்க உரிமையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித பிரயோஜனமும் இல்லை என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


