கத்தியுடன் ரீல்ஸ்.. இளைஞர்களை தட்டித்தூக்கிய போலீஸ்..!

 
கத்தியுடன் ரீல்ஸ்.. இளைஞர்களை தட்டித்தூக்கிய போலீஸ்..! கத்தியுடன் ரீல்ஸ்.. இளைஞர்களை தட்டித்தூக்கிய போலீஸ்..!

இன்ஸ்டாகிராமில் கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்ட  இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சமூக வலைதளங்களில் அதிக  லைக்ஸ் மற்றும் அதிக ஃபாலோயர்களை பெற வேண்டும் என்கிற மோகத்தாலும்,  எப்படியாவது பாப்புலர் ஆகிவிட வேண்டும் என்றும் ஆசைப்பட்டு இளைஞர்கள் பலர் ஆபத்தான மற்றும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் தண்டவாளங்களில் சென்று ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் எடுப்பது, மலை உச்சியில், அருவிகளின் உச்சியில் சென்று மற்றும் ரயில் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில்  வீடியோ எடுப்பது, கையில் பட்டா கத்தியுடன் கேக் வெட்டுவது அல்லது வீடியோக்களை வெளியிடுவது என பல மோசமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறும் தவறான செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு போலீஸார் எச்சரித்து வருகின்றனர். 

instagram

அந்தவகையில் புளியந்தோப்பு  ராமசாமி தெரு பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான்(19),   ஃபர்கான் மற்றும்  புளியந்தோப்பு பழைய வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது பைசல் (19) ஆகிய மூன்று இளைஞர்களும் கையில் கத்தியை வைத்தபடி அச்சுறுத்தும் விதமாக  தங்கள் இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரீல்ஸ்  வெளியிட்டுள்ளனர். பொதும்மக்களை அச்சுறுத்தும் விதமாக இளைஞர்கள் வீடியோ வெளியிட்டதாக புளியந்தோப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

arrest

இதனையடுத்து புகார் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீஸார், நேற்று இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ரிஸ்வான் மற்றும் ஃபைசல் ஆகிய இருவரையும்  கைது செய்த புளியந்தோப்பு போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு இளைஞர் ஃபர்கானை தேடி வருகின்றனர்.