எஸ்.பி.வேலுமணி தொடர்பான வழக்கை ரத்து செய்ய மறுப்பு!!

 
velumani

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி  மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
sp velumani

சென்னை, கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கூறியதில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சொத்து சேர்த்ததாகவும்,  முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர் மீது வழக்குகள் பதியப்பட்டன.  இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.  அதில் ஒளிவு மறைவற்ற முறையில் டெண்டர் கோரப்பட்டதாகவும் , அதில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்றும் அந்த குழுவிலும் இடம்பெறவில்லை என்றும் வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது. 

high court

 ஆரம்பகட்ட விசாரணை கருத்தில் கொள்ளாமல் பணிகள் செயல்படுத்தியது தொடர்பான சிஏஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையின் அடிப்படையில் தன் மீது வழக்கு பதிவு செய்து இந்நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தி  உள்ளனர் என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது. அறப்போர்  இயக்கத்தின் தரப்பில் பொத்தாம் பொதுவாக அல்லாமல் குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை கூறி அளிக்கப்பட்ட புகார் ஆதாரமாக ஏராளமான ஆவணங்கள் தங்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு; முந்தைய அரசும் லஞ்ச ஒழிப்புத்துறையும் தான் உள்நோக்கத்துடன் செயல்பட்டது என்று வாதிடப்பட்டது.இதை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி வழக்கில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம்  அனுமதி அளித்தது.  மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என்று கூறிய  உயர் நீதிமன்றம்,  டெண்டர் முறைகேடு தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறியது. 

sp

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய டெண்டர் முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்கள் மீதான முகாந்திரம் இருப்பதால் 5 நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும்  6 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும்  நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.