சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தபடி பத்திரப்பதிவு

 
பத்திரப்பதிவு பத்திரப்பதிவு

சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தபடி 24 மணி நேரமும், 365 நாளும் ஆவணம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு பதிவு மேற்கொள்ளும் வகையில் பல்வேறு புதிய வசதிகளை பதிவுத்துறை அறிமுகம் செய்துள்ளது.

பத்திரப்பதிவு கட்டணக் உயர்வு அமலுக்கு வந்தது..

தமிழக பதிவுத்துறை சார்பில் பத்திரப்பதிவு, திருமண பதிவு, சங்கங்கள் பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 160 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பதிவுத்துறை கணினிமயமாக்கும் ஸ்டார்  திட்டத்தை தொலைநோக்கு கண்ணோட்டத்துடன் 2000ம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டத்தின் பல்வேறு புதிய சேவைகளை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் இந்தியாவிலே முதல் முறையாக, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு என்ற முறை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் சார் பதிவாளர் அலுவலகத்தில் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும், ஆவணம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்து கொள்ளலாம்.


காகிதமில்லா ஆவணப்பதிவு - காகிதமில்லாமல் இணைய வழியில் ஆவணங்கள் சமர்ப்பிக்கலாம்

நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு - புதிய அடுக்குமாடி குடியிருப்பு, மனைகளை மட்டும் வாங்கும் போது சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமலேயே இணையவழியாக ஆவணம் பதிவு செய்யலாம்.

தானியங்கி பத்திர உருவாக்கம்  -  பொதுமக்கள் பிறர் உதவியின்றி தங்களின் ஆவணத்தை தாங்களே உருவாக்கலாம்.

QR Code மூலம் பணம் செலுத்தும் முறை -  ரூ.1000 க்கும் குறைவாக பணம் செலுத்த வேண்டிய நிகழ்வுகளில் QR Code மூலம் பணம் செலுத்தலாம்

அடுக்குமாடி குடியிருப்பு மறுவிற்பனை ஆவணங்களை அன்றே திரும்ப பெற்றுக் கொள்ளலாம்

பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் சான்றிட்ட நகல்கள் உடனுக்குடன் வழங்கும் வசதி

சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளை எளிய முறையில் வில்லங்கச்சான்றில் தேடுதல்

”TNREGINET” என்ற கைபேசி செயலி வழியாக வில்லங்கச்சான்று, வழிகாட்டி மதிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறியும் வசதி

மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே இணையதள வாயிலாக அடுக்குமாடி குடியிருப்போர் சங்கப்பதிவு மேற்கொள்ளலாம்

மணமகன் (அல்லது) மணமகள் பெயர், பிறந்த தேதி விபரத்தை உள்ளீடு செய்து திருமண விபரங்களை பெறலாம்