தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள்? தமிழருக்கு அட்வைஸ் செய்த சோமேட்டோவுக்கு கடும் எதிர்ப்பு!!

 
“டேய் ஓ ….தா, ஏன்டா லேட்டா வந்த “-அசிங்கமாக திட்டி ,இடுப்பை ஒடித்து படுத்தப்படுக்கையான zomato ஊழியர் ..

இந்திய அளவில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சோமேட்டோ அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த விகாஸ் என்பவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் , சோமேட்டோவில்  உணவு ஆர்டர் செய்தேன்.  அதில் நான் இந்தி ஆடர் செய்த உணவு முழுமையாக இல்லாமல் இருந்தது.

ttn

 இதுகுறித்து கஸ்டமர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது,  பணம் திரும்பக் கிடைக்காது ; உங்களால் இந்தியில் பிரச்சினையை விளக்க முடியவில்லை.  ஒரு இந்தியராக இருந்து கொண்டு இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.  

tn

இதை விகாஸ் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பதிவிட்டுள்ளார். இதையடுத்து சோமேட்டோ நிறுவனத்திற்கு  எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். தர்மபுரி எம்பி செந்தில்குமார்,  எப்போதிலிருந்து இந்தி இந்தியாவின் தேசிய மொழியானது? தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு நுகர்வோர் ஏன் இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும்? என்று கடுமையாக விளாசியுள்ளார். அத்துடன் #Reject_Zomato என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.


ஏற்கனவே டெலிவரி பாய் ஒருவர் நுகர்வோருக்கு கொடுக்கவேண்டிய உணவை சாப்பிட்டது, பெண் நுகர்வோரை பெங்களூருவில்  சோமேட்டோ ஊழியர் தாக்கியது என  சோமேட்டோ  மீதான சர்ச்சைகளும், புகார்களும் தொடர்ந்து கொண்டே செல்கிறது என்பது கவனிக்கத்தக்கது.