முதுகலை மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் விதியில் தளர்வு!!

 
doctors

முதுகலை மருத்துவர்கள் படிப்பை முடித்த பிறகு, 2 ஆண்டுகாலம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது. 

doctor

இந்நிலையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான காலம், 2 ஆண்டுகளாக இருந்ததை ஓர் ஆண்டாக குறைத்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

tn

 படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனையில் பணிபுரிய விருப்பம் இல்லாதோர் ₹40 லட்சத்துக்கு பதில், ₹20 லட்சம் கட்டினால் போதும்  எனவும் , முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் ரூ.20 லட்சத்துக்கு பதிலாக ரூ.10 லட்சம் செலுத்தினால் போதும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.