சாட்டை துரைமுருகன் விடுவிப்பு

 
சாட்டை துரைமுருகன் மீது மேலும் 4 வழக்கு!

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அனுப்ப நீதிபதி சுவாமிநாதன் மறுத்த நிலையில், அவர் விடுவிக்கப்பட்டார்.

g

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சார மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி , தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசு, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக சாட்டை துரைமுருகன் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரை முருகனை விடுவித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சாட்டை துரைமுருகன், திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாமிநாதன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நீதிமன்ற காவலுக்கு அனுப்ப தேவையில்லை என உத்தரவு பிறப்பித்தார்.