கல்வித்துறை அதிகாரி வாகனத்தில் மதக் குறியீடு
கல்வித்துறை அதிகாரி வாகனத்தில், வாசகத்துடன் கூடிய மதக் குறியீடு இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைலாகிவருகிறது.
பள்ளிக்கல்வித் துறையில் அடுத்த சர்ச்சையாக கல்வித்துறை அதிகாரி வாகனத்தில், வாசகத்துடன் கூடிய மதக் குறியீடு இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைலாகிவருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட கல்வித்துறை அதிகாரியின் வாகனமாக இருக்கும் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட வாகனம் குன்றத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர். ஆனால் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக, ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும், இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.