"துரைசாமியை பொறுப்பிலிருந்து நீக்குக" - வைகோவிற்கு கடிதம்!!

 
durai vaiko

திருப்பூர் துரைசாமியை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று மதிமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஏகே மணி  கடிதம் எழுதியுள்ளார்.

vaiko

மதிமுகவில் வாரிசு அரசியலை கண்டித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவிற்கு அவை தலைவர் துரைசாமி கடிதம் ஒன்றை எழுதினார். அதில் மதிமுகவை அதன் தாய் கழகமான திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.  அத்துடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தன்னிச்சையாக எடுத்து நடவடிக்கைகளால் கட்சி பாதிக்கப்படுவது குறித்து தான் கடிதம் எழுதியதாகவும் , அந்த கடிதங்களுக்கு பதில் வரவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். அவைத் தலைவர் துரைசாமியின் இந்த கடிதம் மதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் துரைசாமி அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளராக நான் அலட்சியப்படுத்துகிறேன் என்று வைகோ தெரிவித்தார்.

vaiko

இந்தநிலையில் மதிமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஏகே மணி, வைகோவிற்கு  எழுதியுள்ள கடிதத்தில்,  மறுமலர்ச்சி தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு விரோதமாகவும், தன் சுயநலத்திற்காக அறிக்கை கொடுத்துள்ளார். இவர் அவைத் தலைவர் பொறுப்பில் நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார் என்பதால், அவரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.