ரெப்போ வட்டி விகிதம் 3வது முறையாக குறைப்பு..!!

 
rbi rbi

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.5% குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி.  இதனையடுத்து  ரெப்போ வட்டி விகிதமும் 6 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாக குறைந்தது. ஏற்கனவே இரண்டு முறை ரெப்போ  வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில்,  மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.  ரெப்போ வட்டி விகிதம் 0.5% சதவீதம் குறைக்கப்பட்டதால் வீடு, வாகனங்களுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் குறையவுள்ளது. 

rbi

முன்னதாக பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் ஆகிய மாதங்களை சேர்த்து ரெப்போ வட்டி விகிதம் 1% சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில்,  ஆறு மாதங்களில் 1 சதவீதம் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வட்டி விகிதம் குறைக்கப்பட்டதை அறிவித்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.