தக்காளியை தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு? - இல்லத்தரசிகள் அதிர்ச்சி

 
“தங்கமும் வேணாம் ,வெள்ளியும் வேணாம் ,வெங்காயம் மட்டும் போதும் “என்று onion ஐ  ஆட்டைய போடும் நபர் -இனி வெங்காயத்தையும் வங்கி லாக்கரில்தான் வைக்கணும் போல

தக்காளி விலையை தொடர்ந்து இந்த மாத இறுதியில் வெங்காயத்தின் விலையும் அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

வடமாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாக தக்காளியின் விளைச்சலில் பாதிப்பை ஏற்பட்டது. இதனால் தக்காளியின் வரத்து குறைந்து அதன் விலை அதிகரித்து. தமிழகத்தில் அரசின் சார்பாக நியாய விலை கடை மற்றும் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  குறிப்பாக சென்னையில் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் விலை 200 ரூபாயை தொட்டது. இதனால் சாமானிய மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். நேற்று ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தக்காளி விலை இன்று கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

tomato

இந்த நிலையில், தக்காளி விலையை தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் அதிகரிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடையை செய்துள்ளது. வரும் ஆகஸ்ட் இறுதியில் இருந்து வெங்காய விலை படிப்படியாக உயரும் எனவும், செப்டம்பர் மாதத்தில் வெங்காய விலை கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.70 வரை உயரலாம் என கூறப்படுகிறது.  இருப்பினும் கடந்த 2020ம் ஆண்டு ஏற்பட்ட விலை உயர்வை போல் வெங்காயத்தின் விலை உயர வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.