தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை

 
Diwali Diwali

தீபாவளிக்கு முந்தைய நாள் (அக்.30) விடுமுறை நாளாக அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீபாவளி: வீட்டில் வழிபடுவது ஏன்? எப்படி? - எண்ணெய்க் குளியல், லட்சுமி பூஜை  - உகந்த நேரம் என்ன? | how to celebrate deepavali? - Vikatan

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் நடப்பு ஆண்டு  உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள், இந்தியா மற்றும்   உலக நாடுகள் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்ட விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, பட்டாசு வியாபாரம் மும்மரமாக நடந்து   வருகிறது. இந்நிலையில் நடப்பு மாதம் 31-ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படவுள்ள பட்சத்தில், மறுதினம்  நவம்பர் மாதம் 1-ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழக அரசு   விடுமுறை  நாளாக அறிவித்துள்ளதால், அடுத்து வரும் நவம்பர்2- மற்றும் 3-ம் தேதிகளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை என்பதால், தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்கு தொடர்ந்து 4- நாட்கள் விடுமுறை தினங்களாகயிருந்து தீபாவளியை பொதுமக்கள் அனைவரும்  குதூகலமாக கொண்டாட கால அவகாசம் கிடைத்துள்ளது. 

Diwali festival: 364 calls were reported to the fire department across  Tamil Nadu | தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் 364 அழைப்புகள் தீயணைப்புத்  துறைக்கு வந்ததாக தகவல்


இதற்காக தமிழக அரசுக்கு பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்த பட்டாசு உற்பத்தியாளர்கள், ”புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது  போல, தீபாவளி பண்டிகையின் முந்தையதனமான அக்டோபர் 30-ம் தேதி புதன்கிழமையையும் விடுமுறை நாளாக அறிவித்தால் தொடர்ந்து 5- தினங்கள் விடுமுறை கிடைத்த  மக்கள் மகிழ்ச்சியில் திளைப்பதோடு  மட்டுமின்றி, பண்டிகையை கொண்டாட வெளியூர்களிலிருந்து வாகன போக்குவரத்துகள் மூலமாக வந்து செல்ல வசதியாயிருந்து, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வதிலும் முனைப்பு  காட்ட ஏதுவாயிருக்கும் என்ற பட்டாசு உற்பத்தியாளர்கள், அதேபோன்று தொடர் விடுமுறை நாட்கள் கூடுதலாகியிருப்பதால் நவம்பர் மாதம் 2-ம் தேதி சனிக்கிழமை வரை தற்காலிக பட்டாசு கடைகளில் சில்லறை வணிக பட்டாசுவிற்பனைக்கு உரிமம் கொடுத்துள்ள தமிழக அரசு அந்த உரிமத்தை 4-ம் தேதி திங்கட்கிழமை வரை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். உச்சநீதிமன்றமே  நா ட முழுவதும் பசுமை பட்டாசு வெடிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளதையடுத்து, தலைநகரம் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ள அரசு அதனைத் தளர்த்தி, தீபாவளி பண்டிகை தினத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதியளித்தால் டெல்லி மக்களின் ஏக்கமும் தீரும்” என்றனர்.