நிலக்கரி சுரங்க விவகாரம் - சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்

 
மார்ச் 9 ஆம் தேதி மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை.. !

தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க மத்திய நிலக்கரி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது குறித்து தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. கடந்த மாதம் 20-ந் தேதி 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், 21-ந் தேதி வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து 23, 24, 27, 28 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரின் பதில் உரையும் இடம்பெற்றன. கடந்த மாதம் 29-ந் தேதி முதல், துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி மற்றும் 3-ந் தேதி, 4-ந் தேதி (மகாவீரர் ஜெயந்தி) ஆகிய 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், 3 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க மத்திய நிலக்கரி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது குறித்து தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, சிபிஐ, சிபிஎம், பாஜக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.