காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் - ஒன்றிய அரசுக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு!

 
assembly

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.  காவிரி நீர் உரிமையை காப்பதில் திமுக அரசு எப்போது உறுதியாக இருக்கும் என்றும் , இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்ற தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார்.

assembly

இதன் மூலம்  காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.  இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது.