"மாநில உரிமைகளை மீட்க ஒவ்வொருவரும் தவறாது வாக்களியுங்கள்" - அமைச்சர் உதயநிதி

 
tn

பாசிசத்தை வீழ்த்த ஒவ்வொருவரும் தவறாது வாக்களியுங்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

tnஇந்தியாவின் 18 வது மக்களவைப் பொதுத் தேர்தல்முதற்கட்டமாக  தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று  வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தங்களுக்கான வாக்குச்சாவடியில் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளனர். அத்துடன் பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
 

tn

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மக்களவைத் தேர்தல் 2024 - ஐ முன்னிட்டு  சென்னை தேனாம்பேட்டை S.I.E.T கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் துணைவியாருடன் சென்று வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றினோம்.

பாசிசத்தை வீழ்த்தவும் - மாநில உரிமைகளை மீட்கவும் ஒவ்வொருவரும் தவறாது வாக்களியுங்கள்.

இந்தியா வெல்லட்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.