வேலுசாமிபுரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக விசாரணை!
Sep 29, 2025, 11:35 IST1759125915658
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் வேலுசாமிபுரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2வது நாளாக இன்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் 2-வது நாளாக ஆய்வு நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து விசாரணை மேற்கொண்டார்


