ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு.. நன்றி தெரிவித்த அஷ்வின்..!!
ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன், ஏற்கனவெ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். முன்னதாக பல்வேறு அணிகளில் அவர் விளையாடியிருந்தாலும், கடந்த ஐபில் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடியிருந்தார். இந்த நிலையில் அவர் ஓய்வு குறித்து அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தை கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது பயணம் இன்று முடிவடைகிறது. ஆனால் மற்ற நாடுகளில் நடக்கும் பல்வேறு லீக் தொடர்களில் விளையாடுவதற்கான காலம் தொடர்கிறது.
இதுவரை எனக்கு ஆதரவளித்த அனைத்து ஐபிஎஸ் அணிகளின் உரிமையாளர்களுக்கும் மிக்க நன்றி. எதிர்வரும் பயணங்களை அனுபவித்து சிறப்பாக பயன்படுத்த காத்திருக்கிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.


