தமிழகத்துக்கு புதிய ஆளுநர்? ஆர்.என்.ரவிக்கு ஓய்வு

 
ravi ravi

தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்கலாமா? என மத்திய அரசு பரிசீலனை செய்துகொண்டிருக்கிறது.

4 சட்டதிருத்த மசோதாக்கள் : ஆளுநர் ஒப்புதல்!

ஆர்.என்.ரவி. கடந்த 2019 ஆம் ஆண்டு நாகாலாந்து ஆளுநராக 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். ஆனால் திடீரென 2021 ஆம் ஆண்டு் தமிழக ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார். ஆளுநராக பதவியேற்று 5 ஆண்டுங்கள் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சில தினங்களுக்கு முன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, தர்மேந்திர் பிரதான் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதனையடுத்து அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரவியின் விருப்பத்தின் பேரில் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டாலும் அவர் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamil Nadu Governor RN Ravi slams DMK government for not 'respecting'  national anthem; ends address in minutes : The Tribune India

ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை கூடுதலாக கவனித்துவருகிறார். இதனால் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்கலாமா? என மத்திய அரசு பரிசீலனை செய்து வருக்கிறது குறிப்பிடதக்கது.