சமத்துவத்துக்கான பயணத்தில் சமரசம் தவிர்த்து வெல்வோம் - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

 
tn

 'திராவிடமணி' இரட்டைமலை சீனிவாசனாரின் பங்களிப்புகளை நன்றியுடன் நினைவுகூர்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பட்டியல் இனத்தவர்களின் உரிமைக்காகவும்,  நலனுக்காகவும் தம் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அப்போதைய சென்னை மாகாணத்தில் அமைந்த நீதி கட்சி அரசில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை வலியுறுத்தும் அரசாணை வெளிவர காரணமாக இருந்தவர்  இரட்டைமலை சீனிவாசன். இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளை ஒட்டி சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அவரின் திருவுருவ  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் குறு,சிறு  மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டார்.

tnt

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் பெற்ற கல்வியறிவைக் கொண்டு, ஆதிதிராவிடர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள்!

tnt

இலண்டன் சென்று ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தபோதும், அச்சம் என்பதே இன்றி, அவருடன் கைக்குலுக்க மறுத்து, இந்தியாவில் நிகழ்ந்து வரும் தீண்டாமைக் கொடுமைகளை எடுத்துக் கூறியதுதான் அவரது நெஞ்சுரம். வட்டமேசை மாநாட்டில் அண்ணல் அம்பேத்கருடன் நகமும் சதையும் போல இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் பேசினார். 


ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடிவுக்காக ஓயாமல் குரல் கொடுத்த 'திராவிடமணி' இரட்டைமலை சீனிவாசனாரின் பங்களிப்புகளை நன்றியுடன் நினைவுகூர்வோம்! சமத்துவத்துக்கான பயணத்தில் சமரசம் தவிர்த்து வெல்வோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.