தென்னகத்தின் அம்பேத்கர் எனப் போற்றப்படும் இரட்டை மலை சீனிவாசன் - தினகரன் ட்வீட்

 
tn

பட்டியலினத்தவர்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் தம் வாழ்நாளை அர்ப்பணித்தவர் இரட்டைமலை சீனிவாசன்  என்று தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

th

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன்  அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர் என பன்முகத்தன்மை கொண்டவர்.  ஆதி தமிழர் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன் (இதழ்) என்ற மாத இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர். இரட்டைமலை சீனிவாசன் கலால் வரி அதிகமாகக் கிடைப்பதால் ஆங்கில அரசு இந்தியா முழுவதும் நிறைய மதுக்கடைகளை திறந்து வைத்திருந்தது. இதில் உழைக்கும் மக்களான அடித்தட்டு மக்களின் பணம் உறிஞ்சப்படுவதாக சீனிவாசன் கருதினார். அறவே கடையை மூடச் சொன்னால் மூட மாட்டார்கள் என்பதால் குறைந்தபட்சம் விடுமுறை நாட்களிலாவது மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 24.09.1929-இல் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை அரசு ஏற்றுக்கொண்டது. ஆலய நுழைவுத் தீர்மானம்,  ஆதி திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு,  இலண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்பு என புதிய சரித்திரம் படைத்த இவர்  1945  ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி 86ஆம் வயதில் காலமானார்.
 TTV Dhinakaran

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், தென்னகத்தின் அம்பேத்கர் எனப் போற்றப்படும் இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று.

th

அப்போதைய சென்னை மாகாணத்தில் அமைந்த நீதிகட்சி அரசில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை வலியுறுத்தும் அரசாணை வெளிவர காரணமாக இருந்ததோடு மட்டுமின்றி மகாத்மா காந்தி தமிழ் மொழியை அறிந்து கொள்வதற்கு மூலக்காரணமாக இருந்தவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்.

பட்டியலினத்தவர்களின் உரிமைகளுக்காகவும்,  நலனுக்காகவும்  தம் வாழ்நாளை அர்ப்பணித்தவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். அவரது பிறந்தநாளில் பட்டியலினத்தவர்களின் உரிமைகளை எக்காரணத்தைக் கொண்டும் நீர்த்துப்போகாமல் பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்." என்று குறிப்பிட்டுள்ளார்.