காசிமேடு மீன் சந்தையில் அலைமோதிய கூட்டம் : கொரோனா பரவும் அபாயம்!!

 
ttn

தமிழகத்தில் கொரோனா  - ஒமிக்ரான்  பரவல் அதிகரித்து வரும் சூழலில் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது.  முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்.  தடைசெய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காசிமேடு மீன்பிடி தளத்தில் இன்று முதல் சில்லறை விற்பனைக்கு தடை!

மருத்துவமனைகள்,  மருந்தகங்கள்,  பெட்ரோல் பங்குகள் ,உணவகங்களில்  பார்சல் வாங்கிக் கொள்ள அனுமதி உண்டு,  அவசர தேவைகளுக்காக வெளியூர் செல்பவர்கள் வாடகை வாகனங்களில் பயணம் செய்யலாம்,  திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களுக்கு பத்திரிகைகளுடன் செல்லலாம்,  காய்கறி கடைகள், மீன் , இறைச்சி கடைகள் செயல்படும். புறநகர் ரயில்சேவை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயங்காது,  கேளிக்கை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் தடை , மதுபான கடைகள், மொபைல் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

காசிமேடு மீன்பிடி தளத்தில் இன்று முதல் சில்லறை விற்பனைக்கு தடை!

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் காசிமேட்டில் மக்கள்,  இன்று மீன் வாங்க கூட்டம் கூட்டமாக அலை மோதின. மீன் வரத்து என்பது குறைவாக இருந்தபோதிலும் மீன்கள் விலை அதிகமாகவே காணப்பட்டது.  இந்த சூழலில் முழு ஊரடங்கு நாட்களில் அனாவசியமற்ற பயணத்தை மேற்கொள்ள கூடாது என்பதற்காக இன்றே பொதுமக்கள் மீன் வாங்க குவிந்தனர். தொற்று பரவல் அதிகரிக்கும் சூழலில் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றாமல், காசிமேடு மீன் சந்தையில் கட்டுக்கடங்காமல் கூடிய கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.