உயிரிழந்த ரிதன்யாவின் குடும்பத்தினர் இபிஎஸ் உடன் சந்திப்பு..!
அவினாசி அடுத்த கைகாட்டி புதூரில் வசித்து வருபவர் தொழிலதிபர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யாவிற்கும், திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணனின் பேரன் கவின் குமார் கடந்த ஏப்ரல் மாதம் நான்காம் தேதி சுமார் 200 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்துள்ளது. மேலும் வரதட்சணையாக 300 சவரன் நகை 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வால்வோ கார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து புதுமண தம்பதிகள் பழங்கறையில் குடும்பமாக வசித்து வந்துள்ளனர். திருமணமான ஒரு மாதத்தில் கணவருடன் ரிதன்யாவிற்கு சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து நடந்ததை எல்லாம் கூறியுள்ளார் .
விசாரணையில் திருமணத்தின் போது ரிதன்யாவிற்கு அவரது பெற்றோர் 500 சவரன் தங்க நகை தருவதாக கூறி இருந்த நிலையில் 300 சவரன் நகை மட்டுமே வழங்கியுள்ளனர்.இதனால் மீதமுள்ள 200 சவரன் நகையை கேட்டு அவரது கணவர் மற்றும் மாமியார் மாமனார் உள்ளிட்டோர் கொடுமைப்படுத்தியது தெரிய வந்தது. தொடர்ந்து இருதனியாவிற்கு அவரது கணவர் கவின்குமார் மன ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு கொடுமைகளை செய்து உள்ளனர்.

இதனை அடுத்து காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தது. மேலும் தனது மகள் ரிதன்யா இறப்பிற்கு நீதி கேட்டு அவரது குடும்ப உறுப்பினர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் வழக்கு விசாரணையில் காங்கிரஸ் கட்சியின் தலையீடு இருப்பதாக ரிதன்யாவின் தந்தை குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்கொலை செய்த ரிதன்யாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.