ஆளுநர் தேநீர் விருந்து - அதிமுக, பாஜக பங்கேற்பு
சுதந்திர தினத்தை ஒட்டி கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற்றது.
நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
அந்த வகையில் இன்று சுதந்திர தினத்தை ஒட்டி கிண்டி ஆளுநர் மாளிகையில் தற்போது தேநீர் விருந்து நடைபெற்றுவருகிறது. இதில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை காவல் ஆணையர் அருண் பங்கேற்றனர். அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநர் அழைப்பை ஏற்று பங்கேற்றுள்ளனர். ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்க பாஜக சார்பில் தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா வந்துள்ளனர். அதிமுக சார்பில் எம்.பி இன்பதுரை பங்கேற்றுள்ளார். அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார், வெங்கடேஷ், சதாசிவம் ஆகியோரும் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.


