ஆபத்தை உருவாக்கும் அரசுப் பள்ளிகள்- ஆளுநர் ரவி சர்ச்சை பேச்சு

 
rn ravi

அனைவரையும் தேர்ச்சி அடைய வைத்து அரசுப் பள்ளிகள் நாட்டிற்கு ஆபத்தை உருவாக்குகின்றன என ஆளுநர் ரவி தெரிவித்டுள்ளார்.

rn ravi

சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தில் சேர முதலில் ஒப்புக்கொண்டு பின் தமிழக அரசு மறுக்கிறது. தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்று கிடையாது. அந்த கொள்கையை மத்திய அரசு வகுக்கவில்லை. பல்வேறு நிபுணர்கள் கொண்ட குழுதான் உருவாக்கியது. வருங்கால சமுதாயத்தை, இளைஞர்களை கருத்தில் கொண்டு புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்று விட்டன. சில மாநிலங்கள் மெல்ல மெல்ல ஏற்று வருகின்றன. பி.எம். ஸ்ரீ திட்டம் மூலம் கற்றலில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும். கற்றல், கற்பித்தல் திறன் மேம்படும். தமிழக அரசு முதலில் இத்திட்டத்தை ஏற்பதாக அறிவித்தது. ஆனால் தற்போது ஏற்க மறுக்கிறது. ஏற்கும் மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது

அனைவரையும் தேர்ச்சி அடைய வைத்து அரசுப் பள்ளிகள் நாட்டிற்கு ஆபத்தை உருவாக்குகின்றன. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களால் இரண்டு இலக்கு எண்களைக் கூட படிக்க முடியவில்லை. 40% மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்க தெரியவில்லை. இதனால் வேலை வாய்ப்பின்மை ஏற்படுகிறது.நமது பாரத நாடு வலிமையான ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட நாடு. ஆனால் தமிழக அரசு பள்ளிகளில் கல்வித்தரம் மிக மோசமாக உள்ளது. தமிழகத்தின் கல்வித் தரம் தேசிய சராசரியைவிட கீழே போய்விட்டது. தமிழகத்தில் மாணவர்கள் கஞ்சா மட்டுமில்லாமல் ஹெராயின், மெத்தபெட்டமைன் போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர்” என பேசினார்.