மறைந்த இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் பெயரில் சாலை!!

 
th

மாண்டலின் சீனிவாசன் வாழ்ந்த சாலைக்கு அவரது நினைவாக அவரது பெயரையே வைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சரின் மு.க. ஸ்டாலினிடம் மனு அளித்திருந்தனர்.  அதன்படி சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சென்னை கதீட்ரல்  சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணா சதுக்கம் அல்லது டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா மேம்பாலம் அல்லது டாக்டர் எம்.  பாலமுரளி கிருஷ்ணா இசை மண்டலம் என பெயரிட தீர்மானம் செய்யப்பட்டது.

tn

 இதே போல பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாசன் வசித்து வந்த சாலிகிராமம் குமரன் நகர் பிரதானசாலைக்கு மாண்டலின் சீனிவாசன் பிரதான சாலை என பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

tn

இந்நிலையில் மாண்டலின்  சீனிவாசன் வாழ்ந்த சாலிகிராமம் குமரன் நகர் பிரதான சாலை என பெயரிடப்பட்டு இன்று அதன் பெயர்  பலகையானது திறந்து வைக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் ,  தியாகராய நகர் எம்எல்ஏ கருணாநிதி மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் , இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.