கடைசி வரை நிறைவேறாமல் போன ரோபோ சங்கரின் ஆசை..!
நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர், இவர் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகர் என்பது திரையுலகில் உள்ள அனைவரும் அறிந்த சேதி ஆகும். கமல்ஹாசனின் ஒவ்வொரு பிறந்த நாளையும் பேனர்கள் அடித்தும், போஸ்டர்கள் அடித்தும் பிரம்மாண்டமாக கொண்டாடி வருவதை ரோபோ சங்கர் வழக்கமாக வைத்திந்தார்.கமல் படம் ரிலீஸ் ஆனால் முதல் ஷோ மிஸ் பண்ணாமல் பார்ப்பது மட்டுமின்றி தியேட்டருக்கு சென்று கமலின் பேனருக்கு பால் அபிஷேகம் செய்வார். அவர் எந்த அளவுக்கு தீவிர ரசிகன் என்றால், கமலின் ஆளவந்தான் படம் ரிலீஸ் ஆனபோது, மொட்டையடித்து ஆளவந்தான் கமல் கெட் அப்பில் சென்று அப்படத்தை பார்த்திருக்கிறார். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் மட்டுமின்றி ரோபோ சங்கரின் பேரனுக்கு நட்சத்திரன் என பெயர் வைத்ததும் கமல்ஹாசன் தான். அந்த அளவுக்கு கமலின் முரட்டு பக்தனாக இருந்து வந்தார் ரோபோ சங்கர்.
கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகராக அவர் இருந்தும் திரையுலகில் 28 ஆண்டுகளாக இயங்கி வரும் ரோபோ சங்கர் ஒரு படம் கூட கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவில்லை. கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகரான ரோபோ சங்கரால் கடைசி வரை கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க முடியவில்லை.
நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த கணேஷ்கர் - ஆர்த்தி தம்பதியினர் கண்ணீர் மல்க பேசினர். அப்போது பேசிய ஆர்த்தி, 'கமல் சாருடன் நடிக்க வேண்டும் என்பது சங்கரின் நீண்ட நாள் ஆசை. ஆனால், கடைசிவரை அவரது அந்த ஆசை நிறைவேற்றவே இல்லை' என பேசியுள்ளார்.


