தமிழ்நாட்டில் 22 இடங்களில் 'ரோப் கார்' வசதி - வெளியான முக்கிய தகவல்!

 
gb

தமிழ்நாட்டில் 22 இடங்களில் 'ரோப் கார்' வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

gg

போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கத்தில் மலை பிரதேசங்கள், மலை கோவில்கள், கடற்கரை பகுதிகள்  உள்ளிட்ட இடங்களில் தற்போது ரோப் கார் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் தனிப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

tt

இந்நிலையில் சென்னை, திண்டுக் கல், நீலகிரி, கோவை, தேனி, நாமக்கல், சேலம், திருச்சி, தென் காசி, திருவண்ணா மலை, செங்கல்பட்டு, விருதுநகர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட் டங்களில், ரோப் கார் வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பெசன்ட் நகரும்,  பழனி முதல் கொடைக்கானல்,  ஊட்டி முதல் பைக்காரா, குரங்கணி முதல் டாப் ஸ்டேஷன் ,கொல்லிமலை , ஏற்காடு, மலைக்கோட்டை, குற்றாலம், கொடைக்கானல் ஸ்டார் ஏரி, திருமலை கோவில் ,சதுரகிரி ,பர்வதமலை, அகத்தியர் அருவி, திருநீர்மலை ,திருச்செங்கோடு, திருக்கழுக்குன்றம், திருத்தணி உள்ளிட்ட இடங்கள் தேர்வாகியுள்ளன. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணிகளை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடங்கியுள்ளது. இன்னும் ஓரிரு மாதத்தில் இதற்கான  திட்ட மதிப்பீடு தயாரிப்பு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.