தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவு : ஓபிஎஸ் இரங்கல்!!

 
ttn

தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும், ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான கே.ரோசய்யா மறைவிற்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் ஆளுநராகவும் ,ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தின் முதல் அமைச்சராகவும் பணியாற்றிய முனைவர் ரோசய்யா அவர்கள் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

ttn

ஆந்திரப் பிரதேச சட்டமன்ற மேலவை உறுப்பினராக 1968ஆம் ஆண்டு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட முனைவர் கே.ரோசய்யா அவர்கள் மேலவை எதிர்கட்சி தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.  பல ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது , சாலைகள் ,கட்டடங்கள் ,வீட்டு வசதி, போக்குவரத்து, உயர்கல்வி, உள்துறை, நிதி, மருத்துவம் என பல்வேறு இலாகாக்களை திறம்பட வகித்து மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட பெருமைக்குரியவர் ரோசய்யா அவர்கள். 



நிதியமைச்சர் என்ற முறையில்  ஆந்திர மாநிலத்தின் நிதி நிலை அறிக்கையை 16 முறை தாக்கல் செய்த பெருமை ரோசய்யா அவர்களுக்கு உண்டு. மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் இடத்தில் மிகுந்த மரியாதையும், பற்றும் கொண்டவர்.  மாண்புமிகு அம்மா அவர்களும் அவரிடம் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்தார்கள். தூய்மை ,நேர்மை ,எளிமை ஆகியவற்றுக்கு சொந்தக்காரர் இவருடைய இழப்பு ,  ஆந்திர மக்களுக்கு பேரிழப்பு. முனைவர் ரோசய்யா  அவர்களை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கும், ஆந்திரப் பிரதேச மக்களுக்கும் ,எனது ஆழ்ந்த இரங்கலையும் ,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.