43 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ வெற்றி..!
11-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், தமது அணி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 250 ரன்கள் குவித்தது.251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்குடன் சிஎஸ்கே அணியின் சஞ்சு சாம்சனும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் களமிறங்கினர்.
ருதுராஜ் 7 ரன்களில் வெளியேறிய நிலையில், அடுத்து களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 1 ரன்னில் அவுட் ஆனார். அதன் பின்னர் களமிறங்கிய சர்ப்ராஸ் கான் 50 ரன்கள் எடுத்தார். பிரசாந்த் வீர் 43 ரன்களும், ஜேமி ஓவர்டன் 37 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். இதனால், 19.4 ஓவரில் சிஎஸ்கே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சிஎஸ்கே அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்கடித்தது.

