"மகன் குறித்த தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி" - சைதை துரைசாமி

 
tn

முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி சென்ற கார் இமாச்சல் அருகே சட்லுஜ் நதியில்  கவிழ்ந்தது. காரில் 3 பேர் சென்ற நிலையில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனை காணவில்லை. கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  மற்றொருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 

tn

இந்நிலையில் சட்லஜ் நதியில் மாயமான மகன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று  சைதை துரைசாமி அறிவித்துள்ளார். ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட தகவலை அருகில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தெரிவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

tn

சட்லஜ் நதியில் விழுந்த காரில் இருந்து காணாமல் போன வெற்றியை தேடும் பணி 3ஆவது நாளாக தொடர்கிறது; பனிப்பொழிவு காரணமாக வெற்றி துரைசாமியை தேடும் பணியில் சிக்கல் நிலவுகிறது.