சென்னையில் நாய்களுக்கு கருத்தடை- ரூ.10 கோடி ஒதுக்கீடு

 
சேலத்தில் ஒரே நாளில் 60 பேரை கடித்து குதறிய நாய்!

மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற சென்னை மாமன்ற கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற சென்னை மாமன்ற கூட்டத்தில், ஆண்டுதோறும் 50 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக இரண்டு கருத்தடை மையம் அமைப்பதன் மூலம் நாள் ஒன்றுக்கு 200 நாய்களுக்கு கருத்தடை செய்ய முடியும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று புதிதாக 81 பேருந்து பயணியர் நிழற்குடை அமைக்க ரூ.8.46 கோடியும், அதிகாரிகள், பணியாளர்கள் இடையே தகவல் பரிமாற்றத்திற்கு அதிநவீன wireless connection முறையை மேம்படுத்த ரூ.9.30 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவகத்திற்கு தேவையான அரிசி, துவரம் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்யவும்  மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.