பெரியார் பற்றி சீமான் கூறிய சர்ச்சை பேச்சு நிரூபித்தால் ரூ.10 லட்சம் பரிசு

 
பெரியார் பற்றி சீமான் கூறிய சர்ச்சை பேச்சு நிரூபித்தால் ரூ.10 லட்சம் பரிசு  பெரியார் பற்றி சீமான் கூறிய சர்ச்சை பேச்சு நிரூபித்தால் ரூ.10 லட்சம் பரிசு 

 தந்தை பெரியார் பற்றி சீமான் கூறிய சர்ச்சை பேச்சு நிரூபித்தால் 10.லட்சம் பரிசு  திராவிடர் கழக  இளைஞர் அணி அறிவித்துள்ளது.

சீமான் மீது சென்னையில் மேலும் 3 வழக்குகள் பதிவு, 3 more cases registered  against seeman in Chennai

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஜூன் 8-ம் தேதி வடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில் தந்தை பெரியார் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். இதையடுத்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் திக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளர்  த.ஆனந்தன் என்பவர் மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தந்தை பெரியார் எந்த இடத்திலும் விடுதலை நாளேட்டிலும் சீமான் கூறிய சர்ச்சையான பதிவுகளை தந்தை பெரியார் பேசியதோ எழுதிய ஏதோ இல்லை தந்தை பெரியாரின் நன் மதிப்பை குறைக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். தமிழகத்தில் சட்ட ஒழுகை சீர் குலைக்க சீமான் முயற்சிக்கிறார் எனவே அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் சமீப காலமாக சீமான் தந்தை பெரியாரை குறித்தும் முற்போக்கு சிந்தனையாளர்கள் குறித்தும் சீமான் சர்ச்சைகளுக்குள்ளான கருத்துக்களை பரப்பி வருகிறார். தந்தை பெரியார் குறித்து அவர் கூறிய கருத்துக்களை நிரூபித்தால் தருமபுரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 10 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்தார்.