மான் கூட்டங்களை விரட்டிய சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.15,000 அபராதம்
முதுமலை வனப்பகுதிக்குள் மேய்ந்து கொண்டிருந்த மான் கூட்டங்களை பார்த்தவுடன் வாகனத்திலிருந்து இறங்கி அவைகளை விரட்டிய ஆந்திர மாநில சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை ஒட்டி முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த வனப் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக மான்கள், யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள் போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றது. அதுமட்டுமின்றி அறிய வகை பறவை இனங்களும் இந்த வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன. கூடலூரில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலை முதுமலை புலிகள் காப்பகம் வழியாக செல்கிறது. இந்த வழியாக நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் சென்று வருகிறது. அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் சாலை ஓரங்களில் மேயக்கூடிய வனவிலங்குகளை பார்த்து ரசிப்பது வழக்கமான ஒன்று. அது மட்டும் இன்றி வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் வாகனத்தை வனப்பகுதிக்குள் நிறுத்தக்கூடாது, புகைப்படங்கள் எடுப்பது, வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என எச்சரிக்கை பலகைகளும் வைத்துள்ளனர். அதையும் மீறி ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மான் கூட்டத்தை கண்டதும் வாகனத்தை வனப்பகுதியில் நிறுத்தி வாகனத்தில் இருந்து இறங்கினர். அப்பொழுது ஒரு இளைஞர் மான் கூட்டங்களை விரட்டி சென்றுள்ளார். அதை மற்றவர்கள் படம் பிடித்து மற்ற இளைஞர்கள் கூச்சலிட்டு உள்ளனர்
முதுமலை வனபகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, மான் கூட்டங்களை விரட்டிய ஆந்திர சுற்றுலாபயணிகளுக்கு 15,000 அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) November 17, 2024
மேய்ந்து கொண்டிருந்த மான் கூட்டங்களைவேடிக்கை பார்த்த இளைஞர் ஒருவர் திடீரெனஅவற்றை துரத்ததொடங்கினார்.மற்றவர்கள் வீடியோ எடுத்து கூச்சலிட்டனர் pic.twitter.com/QZRNDegf5W
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், இதைப் பார்த்து அந்த இளைஞருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் கடுமையாக எச்சரிக்கை செய்தும் அனுப்பி வைத்தனர். இப்பொழுது இந்த காட்சிகள் ஆனது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.