சாலையில் திரிந்த வளர்ப்பு நாயின் உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

 
நாய் நாய்

சென்னை மேற்கு தாம்பரம் திருவேங்கடம் நகரில் கட்டுப்பாடின்றி சாலையில் திரிய விடப்பட்ட நாயின் உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சென்னை மேற்கு தாம்பரம் திருவேங்கடம் நகரில் வசித்துவருபவர் திவ்யா. இவர் ஜெர்மென் ஷெப்பர்ட் நாயை வளர்த்துவருகிறார். இந்நிலையில் இவர் தனது வளர்ப்பு நாயை கட்டுப்பாடு இன்றி சாலையில் திரிய விட்டதற்காக ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இனி இதுபோல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில் நாய் யாரையும் கடிக்கவில்லை, வீட்டின் அருகே உள்ளவர்களுடன் பிரச்சனை உள்ளதால் நாய் மீது புகார் அளித்துள்ளனர் என உரிமையாளர் திவ்யா தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் முன்பாக விளக்கம் அளித்து அபராத விலக்கு கோரியுள்ளார். ஆனால் பொதுமக்களை அந்த நாய் அச்சுறுத்திவந்ததாக புகார் எழுந்துள்ளது.