“திமுகவை எதிர்க்க தான் பல்வேறு கட்சிகள் போட்டி போடுகிறனர்”- ஆர்.எஸ்.பாரதி

 
rs

தமிழகத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கடந்த நான்கரை மாதமாக ஊதியம் வழங்க வேண்டிய 4,034 கோடியை வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய மோடி பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதிலும் திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 28 திமுக ஒன்றிய கழகம் சார்பில் அந்தந்த ஒன்றியத்தில்  உட்பட்ட ஊராட்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில்,மண்டபம் ஊராட்சி ஒன்றியம் என்மனம் கொண்டான் ஊராட்சியில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  100 நாள் வேலை திட்ட பெண்கள் கலந்துகொண்டு கலந்து தங்களுக்கான நிதியை விடுக்க வேண்டும் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

RS Bharathi

இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "தமிழகத்திற்கு 100 நாள் வேலை திட்டத்திற்கான 4,034 கோடி ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. இதனால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை,எளிய மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.தமிழகத்திற்கு வரும் 6 ஆம் தேதி பிரதமர் வருகை தர உள்ள நிலையில் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம்.இதனை  ஏற்று 100 நாள் வேலை திட்ட நிதியை விடுவிக்க வேண்டும்.  இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் மூன்று வேலையும் பசியின்றி உணவருந்தி வருகின்றனர். இதனை தடுக்கவே 100 நாள் நிதி நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வர வேண்டிய இரண்டே முக்கால் லட்சம் கோரி நிதியை விடுவித்தால் தமிழ்நாடு சொர்க்க பூமியாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றி விடுவார். இலங்கை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கான நடவடிக்கை எடுப்பரா என செய்தியாளர்களின் கேள்விக்கு பல முறை ராமேசுவரத்திற்கு பிரதமர் மோடி  வந்து விட்டார். 11 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து வருகிறார். இந்த பயணம் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கானப்படும் என கூறுவது பித்தலாட்டம் என்றார்.  தற்போது தமிழகத்தில் திமுக 75 ஆண்டுகளான ஆலமரம். புதிய கட்சி தொடங்கியவர்கள் இங்கு தான் ஐக்கியமாகி உள்ளனர். ஆனால் திமுகவை எதிர்க்க தான் பல்வேறு கட்சிகள் போட்டி போடுகிறனர். திமுக மக்களுடன் கூட்டணி வைத்துள்ள கட்சி யாரை பற்றியும் கவலை இல்லை" என தெரிவித்தார்.