மு.க.ஸ்டாலினுக்கு பயந்து தேர்தல் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட வாய்ப்பு- ஆர்.எஸ்.பாரதி

 
rs bharathi rs bharathi

தமிழக முதல்வர் புதிய திட்டங்களை அறிவித்து விடுவார்கள் என்ற பயத்தில் தேர்தல் தேதி முன்கூட்டியே அறிவிக்க வாய்ப்புள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

rs

திருச்சி மாவட்டம், மண்ப்பாறையில் ஒன்றிய திமுகவின் சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் மணப்பாறை ஒன்றியத்தில் கலைஞர் விளையாட்டு அரங்கம் வழங்கிய முதல்வர் துணை முதல்வருக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  பொதுக்கூட்டத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். 

தொடர்ந்து கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்புரையாற்றுகையில்,  “முதல்வர் ஸ்டாலின் பிறக்கும் போதும் துணைமுதல்வர் உதயநிதி பிறக்கும்போதும் ஜெயிலில் இருந்தவர் முத்தமிழ்ழறிஞர் கலைஞர் வேறு எந்த தலைவருக்கும் இந்த வரலாறு கிடையாது. தலைவர் கலைஞர் இடத்தில் இருந்த ஆற்றல் இன்றைக்கு உதயநிதியிடம் உள்ளது. மக்களை கவரக்கூடிய பேச்சாற்றல் உடையவர் உதயநிதி. 2019 நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரேஒரு செங்கல்ல தமிழகத்தில் 39 இடங்களை வென்று காட்டியவர். இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியவர் உதயநிதி. இதனை பொருத்துக்கொள்ளமுடியாமல் எதையெதையோ பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. பிப்ரவரி மாதம் 28 ம்தேதிக்குள் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள். ஆனால் பிப்ரவரி இரண்டாவது வாரத்திலேயே தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளது. ஏனொன்றால் தமிழ்நாட்டில் புதிய திட்டங்களை அறிவித்து விடுவார்கள் தேர்தல் அறிவித்துவிட்டால் செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள். ஆனால் ஸ்டாலின், முத்துவேல்ஸ்டாலின் என்பதை மறந்துவிடக்கூடாது. கலைஞரிடம் பயிற்சி பெற்றவர் எதை எப்போது செய்யவேண்டும் என்று. எஸ்ஐஆரில் மிகச்சிறப்பான பணியை திமுக செய்து காட்டியுள்ளது. இந்தியாவிலேயே வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாததை செய்துள்ளது. விடுமுறை தினங்கள் போக நமக்கு இருப்பது 38 நாட்கள் உங்களது உழைப்புதான் 38 ஆண்டுகளுக்கு இந்த தமிழ் சமுதாயத்தை பாதுகாக்கும் என்ற உணர்வோடு பணியாற்றவேண்டும்” என்றார்.