“விஜயை முதலில் கொள்ளையடித்த பணத்தை வெளியே கொண்டுவரச் சொல்லுங்கள்”- ஆர்.எஸ்.பாரதி
விஜய் முதலில் அவர் கொள்ளையடித்த பணத்தை வெளியே எடுத்து வர சொல்லுங்கள், விஜயின் நாடகம் இன்னும் கொஞ்சம் நாளில் வெளியே தெரியும், எங்கள் தகுதிக்கு அவருக்கு பதில் அளிக்க அவசியம் இல்லை என திமுக அமைப்பு செயாலளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நிம்மியம்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, விஜய் முதலில் அவர் கொள்ளையடித்த பணத்தை வெளியே எடுத்து வர சொல்லுங்கள். காரணம் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஒன்றரை கோடி அபராதம் விதிக்கப்பட்ட மனிதர் தான் விஜய். அவர் வந்து எங்களை பேசுவது எங்கள் தகுதிக்கு நாங்கள் பதில் சொல்ல அவசியமில்லை. காரணம் யார் கொள்ளை அடித்தது, யார் பணம் வாங்கி இப்படி செய்கிறார் என்ன நாடகம், இன்னும் கொஞ்ச நாளில் வெளிச்சத்திற்கு வரப்போகிறது. இவ்வளவு பேசுபவர் ஏன் மோடியை பற்றி பேசவில்லை.யார் யார் மூலம் தாக்கி பேச பார்க்கிறார்கள், திமுக ஆட்சி வருவது, தடுக்க முடியாது. அடிக்க அடிக்க பந்து உந்தும், அரை அரைக்க சந்தனம் மணக்கும், திமுகவை திட்ட திட்ட வெற்றிகள் குவியம்” எனக் கூறினார்.

