பிக்பாஸ் 6-ல் அசீம் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? அவர் பெற்ற வாக்குகள் எத்தனை? RTI-ல் மனு

 
azeem

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் பெற்றார். ரன்னராக விக்ரமன், ரன்னர் அப் ஷிவன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர்.இந்நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்தனர்.

Bigg Boss Tamil 6 winner: Azeem lifts the trophy; wins a prize money of Rs  50 lakh​ | ​Bigg Boss Tamil Season 6 Winner

இந்நிலையில் பெண்களை அழகிப் போட்டிகளுக்கு தயார் செய்யும் பயிற்சி நிறுவனத்தை நடத்திவரும் ஜோ மைக்கேல் பிரவீன், பிக்பாஸ் தமிழ் 6 வது சீசனில் போட்டியாளர்களுக்கு பதிவான வாக்குகள் என்ன என்று ஜோ மைகேல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரி உள்ளார். தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்துக்கு அனுப்பிவைத்துள்ளார். அந்த மனுவில், “பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப பிசிசிசி மூலம் முறையாக சான்றிதழ் பெற்றுள்ளதா?,  பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவை ஒளிபரப்ப தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதா? பிக் பாஸ் நிகழ்ச்சி மீது ஏதேனும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா?  பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவின் சீசன் 1 முதல் சீசன் 6 வரை பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளின் விவரங்களை வழங்கவும். பிக்பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோ சீசன் 6ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் எந்த அடிப்படையில் ஒவ்வொரு வார இறுதியிலும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்?  பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ சீசன் 6-ன் விதிமுறைகள் மற்றும் விதிமுறைகள் சரியாக பதிவு செய்யப்பட்டதா?

Mohammed Azeem (Bigg Boss Tamil 6) Wiki, Age, Girlfriend, Wife, Family,  Biography & More - WikiBio

பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோ சீசன் 6 இன் வெற்றியாளர் எதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்டார்? முகமது அசீம் பெற்ற வாக்குகள் எத்தனை?  எதன் அடிப்படையில் விக்ரமன் ராதாகிருஷ்ணன் ரன்னராக அறிவிக்கப்பட்டார்? விக்ரமன் ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்குகள் எத்தனை?   முகமது அசீம் மற்றும் விக்ரமன் ராதாகிருஷ்ணன் இடையே எத்தனை வாக்குகள் வித்தியாசம்? விக்ரமன் ராதாகிருஷ்ணன் டைட்டிலை வெல்வார் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கும் நிலையில், பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோ சீசன் 6-ன் பட்டத்தை முகமது அசீம் எப்படி வென்றார்?

RTI Initiated On #BiggBossTamil6 !!

Let's Know The Truth Behind the Controversy On the Winning Percentage!!@polimernews @igtamil @galattadotcom@behindwoods @sunnewstamil @CinemaVikatan @BehindTalkies @TamilGlitzin pic.twitter.com/IL9mos8PkP

— Joe Michael Praveen (@RazzmatazzJoe) February 23, 2023


பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோ சீசன் 6 இன் இறுதிப் போட்டியாளர்களுக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன?  பொது மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் முகமது அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறாரா?” என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.