பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி.. அமைச்சர் சேகர் பாபு எச்சரிக்கை..

 
சேகர்பாபு சேகர்பாபு

 பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  தெரிவித்துள்ளார். 

 திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும்  லட்டு தயாரிப்பில் கலப்படம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், திருப்பதிக்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி  நிறுவனம் தான், பழனி பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கும் நெய் விநியோகம் செய்வதாக தகவல் பரப்பப்பட்டது.  அதற்கு மறுப்பு தெரிவித்து பழனி கோயில் நிர்வாகம் விளக்கமளித்திருந்தது. 

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடிவரும் பழனி பஞ்சாமிர்தம்!

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது  இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “கடந்த 2021ம் ஆண்டு  முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்தில் இருந்து தான் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழனி பஞ்சாமிர்தம் தரமாக வழங்கப்படுகிறது. 

தேவைக்கு அதிகமாக நெய் தேவைப்படும்போது தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுகிறது. அந்த தனியார் நிறுவனம், தற்போது புகாருக்கு உள்ளான நிறுவனம்  கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். பஞ்சாமிர்தம் குறித்து வந்தந்தி பர்ப்பிய பாஜகவினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.