திமுக வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கிய சபரீசன்- கடந்தமுறை விட்டதை பிடிக்கணும் என அறிவுரை
திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தேர்தல் பணியில் செய்துவருகிறார்.
நாகர்கோவிலில் திமுக அலுவலகத்தில் முதலமைச்சரின் மருமகன் சபரீசன் கன்னியாகுமரி, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார். கடந்த முறை தோல்வியை சந்தித்த 2 தொகுதிகளை இந்த முறை கட்டாயம் வெற்றி பெற வைக்க வேண்டும் என வியூகம் வகுக்கப்பட்டுவருகிறது. தேர்தல் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் கன்னியாகுமரி திமுக வேட்பாளர் மகேஷ் மற்றும் நாகர்கோவில் வேட்பாளர் ஆஸ்டின் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதேபோல் தென்காசி திமுக வேட்பாளர் கலைகதிரவனை வெற்றி பெற வைக்க வேண்டுமென நிர்வாகிகளுக்கு சபரீசன் அறிவுறுத்தினார். முன்னதாக சென்னை வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.



