10 நாட்களில் ரூ.41 கோடி! சபரிமலையில் கொட்டும் பணமழை
சபரிமலையில் நடை திறந்து 10 நாட்களில் வருமானம் 41 கோடியே 64, லட்சம் ரூபாய் வந்துள்ளது கடந்த ஆண்டை விட 13 கோடியே 33 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் அதிகமாக வந்துள்ளது.
சபரிமலை இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக நடை கடந்த 15 ஆம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் 10 நாட்கள் தரிசனம் செய்த நிலையில், இந்த ஆண்டு ஆறு லட்சத்துக்கு அதிகமானோர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில் தேவசம்போர்டு தலைவர் நேற்றைக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கடந்த ஆண்டை விட பக்தர்கள் அதிகமாக சுவாமி தரிசனம் செய்த நிலையில் வருமானமும் கடந்த ஆண்டு விட கூடுதலாக வந்துள்ளதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் பத்து நாட்களில் கோவில் வருமானம் என்பது 28 கோடியே 30 லட்சத்தி 20 ஆயிரத்து 364 ரூபாய், இந்த ஆண்டு பத்து நாட்களில் 41 கோடியே 64, லட்சத்தி 65 ரூபாய். இது கடந்தாண்டை விட 13 கோடியே 33 லட்சத்தி 79 ஆயிரத்து 701 ரூபாய் அதிகமாக வந்துள்ளதாக ருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்