“எல்லோருடைய ஆசீர்வாதமும் வேண்டும்..” விஷால் உடனான நிச்சயதார்த்தம் சாய் தன்ஷிகா நெகிழ்ச்சி..!!

 
  “எல்லோருடைய ஆசீர்வாதமும்  வேண்டும்..” விஷால் உடனான நிச்சயதார்த்தம் சாய் தன்ஷிகா நெகிழ்ச்சி..!!   “எல்லோருடைய ஆசீர்வாதமும்  வேண்டும்..” விஷால் உடனான நிச்சயதார்த்தம் சாய் தன்ஷிகா நெகிழ்ச்சி..!!

 


 நடிகர் விஷால் -  நடிகை சாய் தன்ஷிகாவின் திருமண நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடந்து முடிந்தது.  

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமாக இருந்து வருகிறார் நடிகர் விஷால்.  இவர் தற்போது ரவிஅரசு இயக்கத்தில் தனது 35வது படமான ‘மகுடம்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.  கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம் என்கிற பேச்சுக்கள் திரைத்துறையில் எதிரொலித்து வந்தாலும்,  நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர்தான் திருமணம் செய்துகொள்வேன் என விஷால் உறுதிபட தெரிவித்துவந்தார்.  

Image

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ‘யோகி டா’ பட விழாவில் நடிகை சாய் தன்ஷிகாவும், விஷாலும் காதலித்து வருவதாக இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்திருந்தார். அத்துடன் இருவரும் ஆகஸ்ட் 29 ம் தேதி அதாவது இன்று திருமண செய்துகொள்ளப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது.   இதனையடுத்து நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் ஒருபுறம் துரிதமாக நடந்து வரும் வேளையில்,  அப்பணிகள் முழுமையாக முடிந்து ‘நடிகர் சங்க கட்டிடம்’ தயாராக இன்னும் சில காலம் பிடிக்கும் என கூறப்படுகிறது.  

Image

ஆகையால் விஷால் திருமணம் எப்போது நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில்,  இன்று விஷால்- சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள விஷால் இல்லத்தில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் நடந்து முடிந்தது.  அவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூல வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.  
 
நிச்சயம் குறித்து பகிர்ந்துள்ள சாய் தன்ஷிகா, “அவருடைய பிறந்தநாளில் , இந்த நிச்சயதார்த்தம் நடந்தது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. எல்லோருடைய ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும்” என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.