புயல் பாதிப்பு - சக்தி மசாலா நிறுவனம் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி

 
tn

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சக்தி மசாலா நிறுவனம் 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. 

சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. வீடுகள், சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என பல்வேறு இடங்களிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. மழை வெள்ளத்தால் ஏராளமான உயிரிழப்பும் ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோடிக்கனக்கான பொது சொத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதன் காரணமாக பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நிதியுதவி அளித்து வருகின்றனர். 


இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சக்தி மசாலா நிறுவனம் 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.