“வெளியே செல்லவே பயமா இருக்கு”- போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் பேட்டி

 
ச் ச்

அஜித் குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, டிஜிபியிடம் பாதுகாப்பு கோரியுள்ளார்.

அஜித் குமார் மரண வழக்கில் போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது. அஜித் குமாரை காப்பாற்ற முடியவில்லையே என்ற மனக் கஷ்டம் ரொம்பவே இருக்கிறது. மேலும் வீடியோ பதிவு செய்து வெளியிட்டதால் மிரட்டல் வருகிறது. மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகின்றனர். வெளியே செல்லவே பயமாக இருக்கிறது. ரவுடிகளை ஏவி கொலை செய்துவிடுவார்களோ என்ற அச்சம் உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று நீதிபதியே கூறியுள்ளார். ஆனால் புகார் கொடுத்தும் இன்னும் பாதுகாப்பு கொடுக்கவில்லை.

கொலை மிரட்டல் வருகிறது. அனைத்திற்கும் துணிந்துதான் வீடியோவை வெளியிட்டேன். நான் முன் வந்ததைத் தொடர்ந்தே அனைவரையும் மிரட்டிவிடலாம் என நினைக்கின்றனர். மனசாட்சி இருப்பதால்தான் வீடியோவை வெளியிட்டேன். அஜித்தை நான் தாக்கியதாக கூட சிலர் கூறுகின்றனர். எனக்கும் என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். ” என்றார்.