தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி,   தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், ஊழியர்களுக்கான  ஊதியத்தை மாநில தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.

தமிழத்தில் வருகிற 19 ஆம் தேதி  ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி மாநிலம் முழுவதும்  பூத் சிலிப் வழங்குதல், மின்னணு இயந்திரங்களில் சின்னம் பொருத்துதல், தேர்தல் கண்கானிப்பு பணி உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்  பணிகளிலும் அரசு ஊழியர்கள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  அவ்வாறு தேர்தல் பண்களில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும். அதனை மாநில தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கும்.

ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது – 20 பார்வையாளர்களை நியமித்தது தேர்தல் ஆணையம்!

அதன்படி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசு ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியம் குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணைய செயலாளர் வெளியிட்டிருக்கிறார். அதில்,  “ தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி நாளுக்கு ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.350 வீதம், 3 நாட்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், தேர்தலுக்கு முந்தையநாள் மற்றும் தேர்தல் நடைபெறும் நாட்களில் உணவுக்காக ரூ.300 என மொத்தம் ரூ.2,050 வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்- மதுக்கூரில் ஒருவர் கூட வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை!

அதேபோல்,  வாக்குப்பதிவு அலுவலர்-1: பயிற்சிக்கு நாள் ஒன்றுக்கு  ரூ.250 வீதம் 3 நாட்ளுக்கு ரூ.750-ம், உணவுக்கு ரூ.300-ம், தேர்தலுக்கு முந்தைய நாள் ரூ.250, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களுக்கு ரூ.250 என  மொத்தம் ரூ.1,550 வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அலுவலர்-2, அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு ரூ.600-ம், வாக்குப்பதிவு அலுவலர்-3-க்கு ரூ.1,550 என்றும் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல்  கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ.800-ம், அலுவலக உதவியாளர்களுக்கு ரூ.600-ம் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.  ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் வரவேற்பு அலுவலருக்கு ரூ.800-ம், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளருக்கு 850 ரூபாயும்,   வாக்கு எண்ணிக்கை உதவியாளருக்கு ரூ.650-ம், அலுவலக உதவியாளர்களுக்கு ரூ.300-ம் ஊதியமாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பணம்

இவைதவிர தேர்தல் பணியில் ஈடுபடும் நுண்பார்வையாளருக்கு ரூ.1,000-ம், வாக்கு எண்ணிக்கை பணியை மேற்பார்வையிடும் நுண்பார்வையாளருக்கு ரூ.450-ம் ஊதியமாக வழங்கப்பட வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது.  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்  வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடும்  அரசு ஊழியர்களுக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவள்ளி அறிவுறுத்தியுள்ளார்.