“2026 தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் எடுப்பதே இறுதி முடிவு”- பாமக செயற்குழு தீர்மானங்கள்

 
“2026 தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் எடுப்பதே இறுதி முடிவு”- பாமக செயற்குழு தீர்மானங்கள் “2026 தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் எடுப்பதே இறுதி முடிவு”- பாமக செயற்குழு தீர்மானங்கள்

சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற செயற்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கும்,  அரசியல் கட்சிகளுடன் பேசி வெற்றி கூட்டணி அமைப்பதற்கும்  கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு செயற்குழு முழு அதிகாரம் வழங்குகிறது என்ற தீர்மானமும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்கவும் வேட்பாளர்களை அங்கீகரிக்கும் படிவம் ஏ, படிவம் பி ஆகியவற்றில் கையொப்பமிடும் முழு அதிகாரத்தையும் டாக்டர் ராமதாசுக்கு வழங்கப்படுகிறது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில் திறம்படவாதாரி வெற்றி தீர்ப்பை பெற்று தந்த சட்ட வல்லுநர்கள், மற்றும் கட்சியை மீட்டெடுத்த மருத்துவர் ராமதாஸுக்கு செயற்குழு பாராட்டு தெரிவிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் உயிர் மூச்சுக் கொள்கையான சமூக நீதிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவும் எல்லா சாதிகளுக்கும் உரிய ஒதுக்கீடு கிடைக்கும் வலியுறுத்தி அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும். பாட்டாளி மக்கள் கட்சியின் முழு மது ஒழிப்பு கொள்கை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த டாஸ்மாக் கடைகளை மூடப்பட வேண்டும்.கஞ்சா கோக்கின் உள்ளிட்ட போதை பொருட்கள் பழக்கத்திற்கு மாணவர்கள் இளைஞர்கள் முதலானோர் ஆளாவதால் இரும்பு கரம் கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..

தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம், நாகப்பட்டினம் மீனவர்களை தாக்குவதும் சிறையில் அடைப்பதுமான கொடுமைகளுக்கு நிரந்தரவு தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும். நீர் ஆதாரத்தில் தமிழ்நாடு கடைமடை மாநிலமாக உள்ளதாலும் வறட்சி காலத்தில் கடுமையாக பாதிக்கப்படுவதாலும் நீர் ஆதாரத்தை மேம்படுத்த காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகளுக்கு பாமக கோரிக்கை. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்ட தொடர் முயற்சி மேற்கொள்வதை தடுத்து நிறுத்தி தமிழ்நாட்டின் உரிமையை காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உள்ளதை 152 ஆக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு கடுமையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் விவசாயிகளின் பயிர் கடன் நகை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் விவசாயிகளின் குடும்பத்துக்கு குழந்தைகள் படிக்கவும் வேலை வாய்ப்பு இருக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்...

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் புதுச்சேரியில் உயர்நீதிமன்ற கிளை துவங்க வேண்டும். தமிழ்நாட்டின் சராசரி மழையளவு குறைந்த தர்மபுரி மாவட்டத்தில் வாழ்வாதாரத்திற்கு காவிரி உபநீர் ஒகேனக்கலில் இருந்து நீரேற்று மூலம் தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி குளம் குட்டைகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். காவிரியின் குறுக்கு தர்மபுரி மாவட்டம் ஒட்டனூர் மற்றும் சேலம் மாவட்டம் கோட்டையூர் இடையில் பாலம் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ளதை நிறைவேற்ற வேண்டும். மேட்டூர் அணையிலிருந்து வீணாக கடலுக்குச் செல்லும் உபரி நீரை மேட்டூர் வட்டார ஏரிகள் ஓமலூர் சரபங்கா நதி சேலம் திருமணிமுத்து ஆறு வசிஷ்ட நதி ஆகியவற்றோடு இணைக்கும் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கடந்த சில  மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையினால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆகியோரின் நீண்ட கால கோரிக்கையாகவும் பல போராட்டங்களை நடத்தி வரும் நிலையிலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்வது குறைந்த ஊதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்..

சேலம் இரும்பாலைக்கு 4000 ஏக்கர் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ரூபாய் 5000 க்கு குறைவாக விலை கொடுத்தும் இதுவரையில் அதிக அளவு நிலப்பரப்பு காலியாக உள்ளதால் விவசாயிகளுக்கு நிலத்தை திருப்பி கொடுக்க வேண்டும் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். பசுமைத்தாயகம் அமைப்பின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களால் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்கும் திருமதி ஸ்ரீ காந்தி ராமதாஸ் அவர்களை வாழ்த்தி பாராட்டுகிறோம். பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவராகவும் 46 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சியில் பயணித்து வரும் ஜிகே மணி அவர்களை கட்சியிலிருந்து நீக்கப்பட்டு கட்சிக்கு தொடர்பில்லாத நபர்கள் அவரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்ததற்கு செயற்குழு கண்டனம் தெரிவிக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சி அமைப்பு விடியாக வெற்றி பெறுவதற்கு உரிய திட்டங்கள் செயல்படுத்த அனைவரும் உறுதி ஏற்போம் என்பன உள்ளிட்ட 27 தீர்மானங்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது..